சனி, 29 ஜூன், 2013

ஏஞ்சலினா ஜோலி


 anje
அவர் ஏற்கனவே கதாநாயகிதான்  அதில் சந்தேகம் இல்லை அனால் அவர் உயர்ந்து நிற்பது வேறொரு காரணத்துக்காக  மார்பகப் புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து தன் இரு மார்பகங்களையும் அகற்றிக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. நடிகைகளின் மூலதனம் அழகுதான். ஆனால் சமூக அக்கறையோடு தன் சிகிச்சை விவரங்களை பகிர்ந்து கொண்டதில் தனித்துவம் காட்டியிருக்கிறார் ஏஞ்சலினா  இதோ அவர் எழுதிய கடிதம்
images (1)
” என் அம்மா புற்று நோயோடு பத்து ஆண்டுகள் போராடி மறைந்தார். என் முதல் குழந்தை மட்டுமே பாட்டியைப் பார்த்தது   மற்றவர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை  பாட்டி எப்படி இறந்தார் என்று என் குழந்தைகள்  கேட்டபோது அவர் பட்ட வேதனைகளை விவரிப்பேன். உனக்கும் அப்படி ஆகுமா? என்று அவர்கள் கவலையோடு கேட்பார்கள். இல்லை என்று மறுப்பேன். ஆனால் உண்மை வேறாக இருந்தது. பி ஆர் சி எ 1 என்ற மரபணுவில் எனக்குக்  குறைபாடு இருந்தது. இதனால் எனக்கும் புற்றுநோய் தாக்கும் ஆவத்து இருந்தது. பாரம்பரிய மரபணுக்கள் காரணமாக புற்றுநோய் தாக்குவது கிரிந்த சதவீதம் என்றாலும் இந்த மரபணுக் குறைபாடு இருப்பவரிகளில் 65% பேருக்கு ரிஸ்க் இருப்பதால் டாக்டர்கள் அறிவுரை செய்தனர். நானும் அந்த சதவீதத்தில் அடங்குகிறேன்.
 images
இந்தப் பாதிப்பால் எனக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் ஆபத்து 87% இருப்பதாகவும் கருப்பை புற்றுநோய் தாக்கும் ஆபத்து 50% இருப்பதாகவும் தெரிய வந்தது. கடினமான முடிவுதான் என்றாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை  மூன்று மாத கால முன் தயாரிப்புகள் முடிந்து இதோ என் மார்பகங்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்  இந்த முடிவை நான் மகிழ்ச்சியாகவே எடுத்தேன்.  அதோடு எனக்கு நேர்ந்ததை ரகசியமாக வைத்திருக்க விரும்பவில்லை. புற்றுநோயின் நிழலில் தாங்கள் வாழ்கிறோம் என்பது தெரியாமலே பல பெண்கள் தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.என் அனுபவத்திலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் புற்றுநோய் என்ற அரக்கனுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் சக்தியிழந்து தவிக்கத் தேவையில்லை. இப்போது சாதாரண ரத்தப் பரீட்சை போதும் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம் சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. எது தங்களுக்கு ஏற்றது என பெண்கள் தீர்மானிக்கலாம். தெளிவான முடிவை மன உறுதியோடு எடுத்தேன் என்பதில் நான் பெருமை படுகிறேன்.”
ஏஞ்சலினாவின் இந்தக் கடிதத்துக்குப் பிறகு உலகெங்கும் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அவர் எடுத்த் முயற்சியின் அடிநாதமே அதுதானே
 
http://chinnuadhithya.wordpress.com/2013/06/29/%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக