சனி, 29 ஜூன், 2013

மகாத்மா காந்தியின் அந்தரங்கம்! – (நாறியது காந்தி புகழ்!!)


மகாத்மா என்றும் தேசப் பிதா என்றும் போற்றப்படும் காந்தியை கடவுளுக்கு நிகராக கோவில்களிலும் கூட சிலையாக வைத்து  வழிபட்டு வருகிறார்கள் இந்திய மக்க ள்.    ஆனாலும், காந்தியின் அந்தரங்க பெண் உதவியாளர் மிருதுளா என்ற மனுபென் அப்போது எழுதிய பத்து டைரிகள் வலை த்தளங்களில் இப்போது சர்ச்சை யைக் கிளப்பி வருகின்றன. 
1943-ல் தொடங்கி, காந்தி சுடப்பட்டு இறந்த 1948, ஜனவரி 30-க்கு அடுத்த 22 நாட்கள் வரை  மனுபென் குஜராத்தி யில் எழுதிய 2000 பக்க குறிப்புக்கள் தற்போது கிடைத்திருக்கின்ற ன. ’பாபு என் தாய்’ என்று டைரியில் பாசம் பொங்க குறிப்பிட்டிருக்கு ம் மனுபென்னுக்கு காந்தி மறைந்தபோது வயது பதினெட்டோ பத்தொன்பதோ தானாம்.

காந்தியோடு மேற்கொண்ட நவகாளி யாத்திரையின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மனுபென் விலாவாரியாக விவரித்திருக் கிறாராம்.   பிரம்மச்சரிய சோதனை என்ற பெயரில் 77 வயது காந்தி தன்னுடன் நிர்வாணமாக படுத்து உறங்கியதையெல்லாம் அந்தச் சிறு வயதுக்கே உரிய   வெள்ளந்தித்தனத்துடன் எழுதியிருக்கிறாரா ம் மனுபென். காந்தியைக் குளிப்பாட்ட தினசரி ஒரு பெண் வேண்டு மென்றும், அந்த நேரத்தில் அப் பெண் உடை அணிந்திருக் கக் கூடாது  என்பதும் ஒரு நடை முறையாகவே அப்போது கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாம் . அந்த இளம் வயதில் நிர்வாண நிலையிலும் தன்னிடம் உணர் ச்சி வசப்படாமல் பெண்கள் இருப்பதை சோதிக்கவே இப்ப டி ஒரு ஏற்பாட்டைச் செய்தா ராம் பாபுஜி. இது போன்ற பாலு ணர்வு பரிசோதனைகளை காந்தி  உடனே நிறுத்த வேண்டும் என்று  மொரார்ஜி தேசாயும் வல்லபபாய் பட்டேலும் கண்டித்து கடிதமெல் லாம் எழுதினார்களாம். 2000 பக்கங்களிலும் இப்படி என் னென்ன வோ எழுதித் தள்ளியிருக்கிறாராம் மனுபென்.
இதில் ஆச்சரியப்பட வேண்டியது என்னவென்றால், இந்த டைரிக் குறிப்புக்களை காந்தி சொல்லித்தான் மனுபென் எழுதினார் என்பத ற்கும் அதன் பக்கவாட்டில் காந்தியே கையெழுத்திட்டிருக்கிறார் என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன என்று அடித்துச் சொல்வது தான்.
காந்திக்கு எதிரான கடும் விமர்சனக் கணைகள் அவர் காலத்திலிரு ந்தே பாயத் தொடங்கினாலும், தன்னை ஒரு பேத்தியாகவே நடத்தி னார் காந்தி என மனுபென்னும், காந்தியின் பார்வையோ அவரது தொடுதலோ ஓரு ஆண் மகனின் பார்வை யாகவோ, ஸ்பரிசமாக வோ ஒரு நாளும் இருந்ததில்லை என அவரது பெண் சீடர்களும், தனது ஆஸ்ரமத்தில் தங்கி சேவை புரியும் ஒரு பெண் எந்தச் சல னத்துக்கும் இடம் தராதவராக இருக்க வேண்டும் என்பதில் அதீத அக்கறை கொண்டவராக இருந்தார் காந்தி என்றும் வரலாறு பதிவு செய்திருக்கும் நிலையில்,   ‘இது என்ன கலாட்டா?’ என்று மகாத் மாவையே சந்தேகத்தோடு கலாய்க்கின்ற சங்கதிகளாக இவை வேறு புகுந்து புறப்பட்டிருப்பது சோதனைதான்..  அமரராகி விட்ட காந்திக்கு மீண்டும் ஒரு சத்திய சோதனைதான்!
-சி.என்.இராமகிருஷ்ணன், நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக